மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை: ராகுல் காந்தி கருத்து

By KU BUREAU

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது இந்து என்று கூறிக்கொள்ளும் பாஜகவினர் வன்முறையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அவையில் ராகுல் காந்தி பேசிய சர்ச்சைக்குரிய குறிப்புகளை சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.

ஆவற்றை மீண்டும் இணைக்கும்படி சபாநாயகர் ஒம் பிர்லாவுக்கு, ராகுல் காந்தி கடிதம் எழுதினார். “அவைக் குறிப்பில் இருந்து தனது பேச்சின் பெரும்பகுதி நீக்கப்பட்டது நாடாளுமன்ற ஜனநாயக விதிமுறைகளுக்கு எதிரானது. எந்தவிதமான வார்த்தைகளை நீக்க வேண்டும் என்பதுமக்களவை நடத்தை விதிமுறை380-வது விதியில் தெரிவிக்கப்பட் டுள்ளது. ஆனால் எனது பேச்சின்பெரும்பகுதி அவைக் குறிப்பில்இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. உண்மை நிலவரத்தைதான் நான் எடுத்து கூறினேன்.

பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் பேசுகையில், எங்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறினார். ஆனால், அவரது உரையில் இருந்து ஒரே ஒரு வார்த்தை மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. எனவே, அவைக் குறிப்பில் இருந்துநீக்கப்பட்ட எனது உரையை, மீண்டும் சேர்க்க வேண்டும்” என ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பேட்டியளித்த ராகுல் காந்தி ‘‘பிரதமர் மோடிஉலகில் உண்மைகள் நீக்கப்படலாம், ஆனால் நிஜத்தில் நீக்கமுடியாது. நான் சொன்னதெல்லாம் உண்மை. எனது உரையைஅவர்கள் எவ்வளவு விரும்பினாலும் நீக்கிக் கொள்ளட்டும். ஆனால்,உண்மை வெல்லும்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE