ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் சட்டவிரோதமானது... விளம்பரங்களுக்கும் தடை: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

By காமதேனு

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை பிரபலப் படுத்தக்கூடாது எனவும், பந்தயம் மற்றும் சூதாட்டம் சட்டவிரோதமானது என்றும் சூதாட்டம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிதி மற்றும் சமூக ஆபத்தை ஏற்படுத்துகிறது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும், இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ள மத்திய அரசு, ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நிதிச்சிக்கல்களையும் உருவாக்குகிறது எனவும் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது. வலைதளங்கள், இணைய ஊடகங்களும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடக்கூடாது என அனைத்து அச்சு, மின்னணு ஊடகங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE