டெல்லி அமைச்சர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம், தங்கம் சிக்கியது: அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்

By காமதேனு

டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீடு மற்றும் அவரின் உறவினர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் ரூ.2.82 கோடி, 133 தங்கக்காசுகள் உட்பட 1.80 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரிடம் ஜூன் 9-ம் தேதி வரை அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.

கைது செய்யப்பட்டுள்ள சத்யேந்திர ஜெயினை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு பாஜக தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போதைய அமலாக்கத்துறையின் சோதனையால் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE