மும்பை: கடந்த 2023-ம் ஆண்டு மே 19 அன்று2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024 ஜூன் 28 நிலவரப்படி ரூ.7,581 கோடியாக குறைந்தது.
இதையடுத்து, ரூ.2,000 நோட்டுகளில் 97.87 சதவீதம் வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால்,2.13 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடமே இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.7,581 கோடியாகும்