பள்ளியில் புகுந்த தீவிரவாதிகள்: கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியை!

By காமதேனு

ஜம்மு காஷ்மீரின் குல்காம் நகரில் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூராவில் உள்ள உயர்நிலைப் பள்ளி வகுப்பறைக்குள் தீவிரவாதிகள் இன்று உள்ளே புகுந்தனர். அங்கு பாடம் நடத்திக் கொண்ட ஆசிரியை மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதில் ஆசிரியை ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், போலீஸார் பள்ளியில் குவிந்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்," உயிரிழந்த ஆசிரியை பெயர் ரஜ்னி பாலா. கணவர் மற்றும் மகளுடன் சம்பாவில் வசித்து வந்தார். அவரது உடல் இன்று சம்பாவுக்கு கொண்டு வரப்பட்டு மாலையில் தகனம் செய்யப்படும்" என்று கூறினர்.

கடந்த 5 மாதங்களில் ஜம்மு காஷ்மீரில் 26 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE