காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
முன்னதாக அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது அமைச்சர் சேகர்பாபு, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உடனிருந்தனர்.