வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு… முன்னாள் முதல்வருக்கு 4 ஆண்டு சிறை: டெல்லி நீதிமன்றம் அதிரடி!

By காமதேனு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகனாவார். இவர், கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை ஹரியாணா மாநில முதல்வராக இருந்தார். அப்போது அவரது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.10 கோடி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், கடந்த 2010-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இன்று தண்டனை விவரங்களை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதன்படி சொத்துகுவிப்பு வழக்கு குற்றவாளியான ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது 4 சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE