மெட்ரோவில் இனி கல்யாண போட்டோ ஷூட் நடத்தலாம்!: கட்டண விவரங்கள் தெரியுமா?

By காமதேனு

தேன் நிலவு மற்றும் திருமணத்திற்கு முன்பாக போட்டோ ஷூட் எடுக்கும் மோகம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் திருமண போட்டோ ஷூட் நடத்த அந்த நிறுவனம் அனுமதியளித்து கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதுவரை திரைப்படங்கள் மற்றும் விளம்பர படப்பிடிப்புகளுக்காக மட்டுமே மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது. மெட்ரோ ரயில் சேவையை லாபகரமாக மாற்றும் நோக்கில் மணமக்களுக்குச் சலுகை விலையில் திருமண போட்டோ ஷூட் நடத்தக் கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. அதற்காக குறைவான கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒரு மெட்ரோ ரயில் பெட்டிக்கு அதிகபட்சமாக 2 மணி நேரத்திற்கு முன்பதிவு செய்யலாம். நிற்கும் ரயிலில் படப்பிடிப்பு நடத்த 5 ஆயிரம் ரூபாயும், ஓடும் ரயிலில் படம்பிடிக்க 8 ஆயிரம் ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ரூ.10 ஆயிரம் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். 3 மெட்ரோ ரயில் பெட்டிகள் தேவைப்படுவோர்கள் நிற்கும் ரயிலுக்கு 2 மணி நேரத்திற்கு ரூ.12 ஆயிரம் செலுத்த வேண்டும். ஓடும் ரயிலுக்கு ரூ.17,500 செலுத்த வேண்டும். இதற்கு வைப்புத் தொகையாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான ரயில் சேவை ஆலுவாவில் இருந்து பெட்டா வரை இயக்கப்படும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE