ஜமைக்காவில் அம்பேத்கர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள சாலையை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக ஜமைக்கா சென்றுள்ளார். ஐமைக்கா கவர்னர் ஜெனரல் பேட்ரிக்கை குடியரசுத் தலைவர் சந்தித்துப் பேசினார். அப்போது, தகவல் தொழில்நுட்பத்துறை, மருத்துவம், விளையாட்டு, கல்வி, சுற்றுலா உள்ளிட்டவை குறித்து இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், அந்நாட்டில் அம்பேத்கர் பெயரில் வைக்கப்பட்டுள்ள சாலையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். இந்திய குயடிரசுத் தலைவர் ஒருவர் ஜமைக்கா செல்வது இதுவே முதன் முறையாகும்.