`ஆவணம் இருக்கிறது; தாஜ்மகால் இடம் எங்களுக்கு சொந்தமானது'- சர்ச்சையை கிளப்பும் பெண் எம்பி

By காமதேனு

"தாஜ்மகால் அமைந்துள்ள இடம், முன்பு ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானதாக இருந்தது" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாஜக எம்.பி.தியா குமாரி.

தாஜ்மகால் விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தாஜ்மகால் வளாகத்தில் உள்ள 20 அறைகளில் இந்து கடவுள்களின் சிலை இருக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே அந்த அறைகளை திறந்து சோதனை செய்ய அனுமதிக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தியா குமாரி எம்.பி

இதனிடையே, தாஜ்மகால் இருக்கும் இடம் குறித்து பரபரப்பை கருத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார் ராஜஸ்தான் மாநில எம்.பியும், ஜெய்ப்பூர் அரச குடும்ப உறுப்பினருமான தியா குமாரி. "தாஜ்மகால் வளாகத்தில் உள்ள அறைகள் ஏன் பூட்டிக் கிடைக்கின்றன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். தாஜ்மகால், ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது என்பதற்கான ஆவணம் தங்களிடம் இருக்கிறது. தாஜ்மகாலை முகலாய பேரரசர் ஷாஜகான் கைப்பற்றினார். அப்போது நீதிமன்றம் இல்லாததால் அந்த நேரத்தில் முறையீடு செய்திருக்க முடியாது" என்று கூறினார் தியா குமாரி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE