டெல்லியில் ஜூலை 4 முதல் 7 வரை பிளாஸ்டிக் மறுசுழற்சி உலகளாவிய மாநாடு

By KU BUREAU

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்கிறார்கள். பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, மறுசுழற்சி மற்றும் நிலைத்தன்மை தொடர்பான சிக்கல்களை இந்த மாநாடு தீர்க்கும். பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் 2033ல் 6.9 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மத்திய அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புது டெல்லி அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் (AIPMA) மற்றும் ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் சங்கம் (CPMA) இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் நிலைத்தன்மை (GCPRS) பற்றிய உலகளாவிய மாநாடு ஜூலை 4 முதல் 7, 2024 வரை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழில் தொடர்பான முக்கியமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இந்த மாநாடு முன்னெடுக்கும். பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மறுசுழற்சி 2023 ஆண்டு வாக்கில் 6.9 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசின் ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை உட்பட பல அமைச்சகங்கள் - ரசாயன மற்றும் உர அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றங்கள் அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், ஸ்வச் பாரத் அபியான் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று ஆதரவளிக்க ஒப்புதல் அளித்துள்ளன. இது இந்தியா நிலையான வளர்ச்சி பாதையில் பயணிப்பதன் அடையாளம். பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, மறுசுழற்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் உள்ள சவால்களுக்குத் தீர்வு காண இந்திய மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக்கின் தாக்கம் மற்றும் மிகவும் நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் புதுமையான தீர்வுகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும். 2033ம் ஆண்டளவில் இந்தியாவின் பிளாஸ்டிக் மறுசுழற்சித் தொழில் 6.9 பில்லியன் டாலர்களை எட்டும் நிலையில் இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துறையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவாக, நாட்டில் மறுசுழற்சி விகிதம் தோராயமாக 60% அளவில் உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான புதுமையான தீர்வுகள், பிளாஸ்டிக்கின் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறவுள்ளன.

மேலும், மறுசுழற்சி மூலமாக ஏற்படக் கூடிய வணிக வாய்ப்புகள் குறித்தும் மாநாட்டில் அலசப்படும். AIPMA-ன் நிர்வாகக் குழுவின் தலைவர் அரவிந்த் மேத்தா, GCPRS 2024-ன் தலைவர் ஹிட்டன் பேடா மற்றும் AIPMA-ன் தலைவர் மணீஷ் தெதியா ஆகியோர் மேம்படுத்தப்பட்ட சேகரிப்பு, பிரித்தெடுப்பு மற்றும் மறுசுழற்சி நடைமுறைகள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மேலும், இந்த மாநாடு, மறுசுழற்சிக்கான இயந்திர, இரசாயன மற்றும் வடிவமைப்பு கண்டுபிடிப்புகளை ஆராயும், செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

”இந்தியா ஜீரோ வேஸ்ட் இலக்குடன், GCPRS புதுமையான மறுசுழற்சி தொழில் நுட்பங்கள், மக்கும் பிளாஸ்டிக் போன்ற நிலையான மாற்றீடுகள் மற்றும் திறமையான கழிவு மேலாண்மை தீர்வுகளை முன்னிலைப்படுத்தும். இந்த நிகழ்வு தொழில்துறை தலைவர்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் தங்கள் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து செயல்முறை விளக்கமளிக்கவும், அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளவும் ஒரு தளமாக இருக்கும். மேலும், இக்கண்காட்சியானது தொழில்துறை தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களின் குழுவை ஒன்றிணைக்கிறது.

மேலும், வணிக நெட்வொர்க், ஒத்துழைப்பை உருவாக்குதல் மற்றும் வளர்ந்து வரும் தொழில் போக்குகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது,” என்று திரு. அரவிந்த் மேத்தா கூறினார். இவற்றைத் தவிர, மாநாட்டில் ஜூலை 4ம் தேதி தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்கும் ஒரு வட்டமேஜை நடைபெறும். ஜூலை 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், நிலைத்தன்மை மன்றத்தின் கீழ், பிளாஸ்டிக் கழிவுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு, மறுசுழற்சி மற்றும் நிலைத்தன்மை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் சர்வதேச நிபுணர்களுடன் விவாதிக்கப்படும். ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற தொழில்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கின் பங்கு குறித்தும் விவதங்கள் நடைபெறும்” என்று ஹிட்டன் பேடா கூறினார்.

அரவிந்த் மேத்தா தொழில் நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் மையத்தின் (AMTEC) தலைவரான அரவிந்த் டி.மேத்தா “இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பிளாஸ்டிக் மறுசுழற்சி மதிப்பு சங்கிலித் துறையில் திறமையான நிபுணர்களை நாங்கள் உருவாக்குகிறோம்”என்று குறிப்பிட்டார்.. இக்கண்காட்சியானது பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்பவர்கள், இயந்திர உற்பத்தியாளர்கள், கழிவு தீர்வு வழங்குவோர், மறுசுழற்சி வர்த்தகர்கள், பயோ-பாலிமர் மற்றும் மக்கும் பொருள் உற்பத்தியாளர்கள், மூலப்பொருட்கள் வழங்குவோர், புதுமையான தொடக்க நிறுவனங்கள் மற்றும் சோதனை மற்றும் தரப்படுத்தல் நிபுணர்களை இந்தியா முழுவதும் ஈர்க்கும் என்று தொழில்துறை தலைவர்கள் தெரிவித்தனர்.

நிலையான நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை அமலாக்கத்திற்கான இந்திய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை GCRPS அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மாநாட்டில் பங்கேற்கவும், பதிவு செய்யவும் GCPRS Web: https://gcprs.org; என்ற இணைய முகவரியை பயன்படுத்தலாம். மாநாட்டில் பார்வையாளர்கள் பங்கேற்க https://register.gcprs.org/Visitor/Visitor_Registration.aspx என்ற இணைய முகவரியை பயன்படுத்தலாம். கண்காட்சி பங்கேற்பாளர்கள் https://register.gcprs.org/Visitor/Visitor_Registration.aspx என்ற இணைய முகவரியை பயன்படுத்தலாம்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE