மின்சார வாகனங்கள் தீப் பிடித்து எரிவது ஏன்? என்பது குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத்.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் மின்சார வாகனங்கள் தீப் பிடித்து எரிந்து வருகிறது. பல இடங்களில் இந்த வாகனங்களால் பலர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, மின்சார வாகனங்கள் திடீரென பற்றி எரிவது என்பது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத்.
இது குறித்து அவர் கூறுகையில், "மின்சார வாகனங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பேட்டரி செல்கள் இந்திய நிலைமைகளுக்கு ஏற்றதாக இருக்காது. இந்தியா போன்ற அதிக வெப்பநிலை கொண்ட நாட்டில் பேட்டரி செல்களின் மோசமான தரம் காரணமாக மின்சார வாகனங்களில் தீ ஏற்பட்டிருக்கலாம். இறக்குமதி செய்யப்படும் பேட்டரி செல்கள் இந்திய நிலைமைகளுக்கு ஏற்றதாக இருக்காது.
எனவே செல்களை இறக்குமதி செய்யும்போது நாம் சொந்தமாக ஆய்வுகள் மற்றும் கடுமையான சோதனைகளை செய்யவேண்டியது முக்கியம். பேட்டரி தொழில்நுட்பம் என்பது வளர்ந்து வரும் தொழில்நுட்பம். இந்தியா தற்போது பேட்டரி செல்களை உற்பத்தி செய்வதில்லை. எனவே நம்முடைய சொந்த பேட்டரி செல் உற்பத்தி ஆலைகளை விரைவில் அமைக்க வேண்டும். நாம் தயாரிக்கும் பேட்டரிகள் இந்தியாவின் உயர் வெப்பநிலை சூழலுக்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார்.