எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து!

By காமதேனு

மும்பையின் சான்டாகிரஸ் பகுதியில் எல்ஐசி அலுவலகம் இயங்கிவருகிறது. இந்நிலையில், அந்த அலுவலகத்தின் கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

இரண்டு தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் இயங்கிவரும் சம்பள சேமிப்புப் பிரிவு அறையில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாகவும், அங்கு உள்ள மின் வயர்கள், கணினிகள், கோப்புகள், அறைகலன்கள் உள்ளிட்டவை தீயில் சேதமடைந்ததாகவும் மும்பை தீயணைப்புத் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

8 பேர் கொண்ட தீயணைப்புப் படை, கடுமையாகப் போராடித் தீயை அணைத்தது. இதனால், இரண்டாவது தளத்தைத் தாண்டி தீ பரவவில்லை. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE