பரோட்டா பார்சலில் பாம்பு தோல்: கடைக்கு அதிகாரிகள் சீல்

By காமதேனு

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரியா. இவர் வீட்டின் அருகில் இருக்கும் ஹோட்டலில் பரோட்டா பார்சல் வாங்கியுள்ளார். அதனை வீட்டிற்கு வந்து பிரித்து பார்த்தபோது அவர் அதிர்ச்சியானார்.

அந்த பார்சலைக் கட்டப் பயன்படுத்திய காகிதத்தினுள் பாம்பு உரித்த தோல் இருந்துள்ளது. இதனால் பதறிப்போன ப்ரியா உடனடியாக நெடுமங்காடு போலீஸாருக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பரோட்டா பார்சலை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அத்துடன் சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்குச் சென்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவு பொருட்களைச் சுகாதாரமான முறையில் விநியோகம் செய்யவில்லை என்றும், பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்கவில்லை என்றும் கூறி அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். பரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE