ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில்... மதுபானம் குடிக்கச் சென்ற ஓட்டுநர்: கொந்தளித்த பயணிகள்!

By காமதேனு

பீஹார் மாநிலத்தில் ஒரு மணி நேரம் ரயிலை நிறுத்தி வைத்து விட்டு மது குடிக்கச் சென்ற ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.

பீஹார் மாநிலத்தில் சமஸ்திபூர் – சஹார்சா ரயில் ஒரு மணி நேரமாகியும் கிளம்பால் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ரயில் ஓட்டுநரையும் காணவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், ரயில்வே காவல்துறையினர் ஓட்டுநரைத் தேடி அலைந்தனர்.

அப்போது ரயில் ஓட்டுநர் மது குடித்து விட்டு போதையுடன் வந்துள்ளார். இதையடுத்து ஒரு மணி நேரம் தாமதத்திற்குப் பின் சமஸ்திபூரிலிருந்து ரயில் கிளம்பியுள்ளது. இதுகுறித்து ரயில்வே மேலாளர் அலோக் அகர்வால் கூறுகையில், "ரயில்வே ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார். சமீபத்தில் தேநீர் குடிப்பதற்காக ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டுச் சென்ற சம்பவம் வைரலானது. தற்போது மது குடிப்பதற்காக ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டுச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE