ஒரே மாதத்தில் 18 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் செயல்பாடுகள் முடக்கம்: அதிர்ச்சி தகவல்

By காமதேனு

இந்தியாவில் விதிகளை மீறி செயல்பட்டதால், வெறுப்புத் தகவல்களைப் பகிர்ந்தால் ஒரே மாதத்தில் 18 லட்சத்திற்கும் அதிமான வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்திய திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதி 2021- ன் படி மாதந்தோறும் டிஜிட்டல் தளங்கள் பயனர்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மார்ச் மாதத்திற்கான அறிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும், வெறுப்பு தகவல்களைப் பகிர்ந்தது தொடர்பாகவும் வந்த புகார்களின் அடிப்படையில் 18 லட்சத்துக்கும் அதிகமானோரின் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்பில் மனக்குறையை ஏற்படுத்துவது தொடர்பான பதிவுகள் குறித்து மார்ச் மாதத்தில் பெறப்பட்ட 597 புகார்கள், 74 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் மட்டும் 14 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE