அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்!

By காமதேனு

வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமானின் போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள திக்லிபூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய புவியியல் மையம் தனது ட்விட்டரில், “ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற புள்ளிக் கணக்கில் நேற்று இரவு 11.04 மணிக்கு அந்தமான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள திக்லிபூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் ஏற்பட்டது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE