பிரதமரின் நேரலை பேச்சும்... கேஜ்ரிவாலின் ஆக்‌ஷனும் - வைரலாகும் வீடியோ

By காமதேனு

காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசும் போது டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் நடந்து கொண்ட விதம் தொடர்பாக வீடியோ தற்போது வைரலாகி வருகிறார்.

இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 28-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அப்போது, எரிபொருள் உயர்வு தொடர்பாக பாஜக ஆளாக மாநில அரசுகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் நடவடிக்கை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேரில் உட்கார்ந்தபடியே, தனது இரண்டு கைகளையும் தலைக்கு பின்னாடி வைத்துக் கொண்டும், பின்னர் கன்னத்தில் வைத்துக் கொண்டும் பிரதமரின் பேச்சை கவனித்துள்ளார். அவரது இந்த செய்கை தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE