இளையராஜாவுக்கு பிரதமர் மோடியிடம் இருந்து வந்த போன் கால்

By காமதேனு

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் நன்றி தெரிவித்துள்ளார்.

அண்மையில் புத்தகம் ஒன்றிற்கு முன்னுரை எழுதிய இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனை வரவேற்றுள்ள தமிழக பாஜக அண்ணாமலை, இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறினார். அதே நேரத்தில், பிரதமரை புகழ்ந்து பேசினால் விருது கிடைக்கும் என்று சீமான் விமர்சித்திருந்தார்.

மேலும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, தமிழகத்தில் உள்ள கட்சிகளை விமர்சித்திருந்தார். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னை பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE