கொழும்புவிற்கு காய்கறி, மருந்து அனுப்ப அரசு தயாராக இருக்கிறது!

By காமதேனு

இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப உரிய வசதிகளைச் செய்துதர வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், " யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மார்ச் 31-ம் தேதி பிரதமரை சந்தித்தபோது இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தேன்.

தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை கொழும்புவுக்கு அனுப்ப தமிழக அரசு உறுதியாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும்" என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE