உலகத்திலேயே இந்தியாவில் அதிக விலைக்கு விற்பது எது தெரியுமா?

By காமதேனு

உலகத்திலேயே இந்தியாவில் அதிக விலையில் சமையல் கியாஸ் விலை விற்கப்படுவதாக குளோபல் எனர்ஜி பிரைஸ் என்ற நிறுவனம் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சமையல் கியாஸ் விலை உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஒரு சிலிண்டரின் விலை 990 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிக விலையில் சமையல் கியாஸ் விலை விற்கப்படுவதாக குளோபல் எனர்ஜி பிரைஸ் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல உலகத்திலேயே பெட்ரோல் விலையில் இந்தியா 3-வது இடத்திலும், டீசல் விலையில் இந்தியா 8- வது இடத்தில் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE