22 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

By காமதேனு

இந்தியாவில் நிலைப்பாடு குறித்து தவறான போலியான செய்திகளை 22 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.

இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பதாக செயல்படும் யூடியூப் சேனல்களை மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து முடக்கி வருகிறது. இதுவரை 77 யூடியூப் சேனல்கள், இனையதளம் மற்றும் ட்விட்டர் கணக்குகள் என பல்வேறு வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தற்போது புதிதாக 22 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் விவகாரம், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவில் நிலைப்பாடு குறித்து தவறான போலியான செய்திகளை 22 யூடியூப் சேனல்கள் பரப்பி வந்ததாகவும், அந்த 22 யூடியூப் செயல்களையும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கி உள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 18 யூடியூப் சேனல்கள் இந்தியாவில் இருந்து செயல்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானை சேர்ந்தவையாகும். 3 ட்விட்டர் கணக்குகள் ஒரு ஃபேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE