6 மாநிலங்களில் வெப்பம்; 3 மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை மையம் தகவல்

By KU BUREAU

புதுடெல்லி: நாடு முழுவதும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி நரேஷ் குமார் நேற்று கூறியதாவது: மே மாதம் இதுவரையில் பல இடங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது.

குறிப்பாக, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையில், இந்த 6 மாநிலங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. அதன் பிறகு அங்கு வெப்பநிலை சற்று தணியும்.

அதேபோல் தமிழ்நாடு, கேரளா, தென் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE