சி.பி.எஸ்.இ 10, 12ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வு தேதி அறிவிப்பு

By காமதேனு

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15வரை நடைபெறும். சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே24ம் தேதி வரை நடைபெறும். சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

2ம் பருவத் தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 26ம் தேதி தொடங்கும் 2ம் பருவத் தேர்வுக்கான பாட வாரியான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்வு கால அட்டவணை, தேர்வு நேரம், தேர்வுகள் உள்ளிட்ட விவரங்களுக்கு இணையதள முகவரி www.cbse.gov.in அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் கரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. அறிவுரை வழங்கியிருக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக வினாத்தாளை படிக்கச் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE