உக்ரைன், ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி பேசியது என்ன?

By காமதேனு

போரினால் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி அடுத்தது பேசியதோடு, சுமியின் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தொடர்ந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12-வது நாளாக எட்டியுள்ள நிலையில் கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் இன்று தற்காலிகமாக போரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் பத்திரமாக வெளியேறவும் போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனிடையே, உக்ரைனின் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார். அப்போது, வடகிழக்கு உக்ரைனின் முக்கிய நகரமான சுமி நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க உதவி செய்யுமாறு உக்ரைன் அதிபரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

கடுமையான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைனிலிருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவி செய்தமைக்காக, உக்ரைன் அரசுக்கு தனது நன்றியையும் மோடி தெரிவித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவருக்கும் இடையே 35 நிமிடங்கள் பேச்சுகள் நீடித்ததாகவும் சொல்லப்படுகிறது. சுமி நகரில் மட்டும் 700 இந்திய மாணவர்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். 50 நிமிடங்கள் நடந்த உரையாடலில், உக்ரைன் அதிபரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என புதினை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். சுமி உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்தியர்களை மீட்க முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அதிபர் புதின் உறுதியளித்துள்ளார். உக்ரைனின் முக்கிய இடங்களில் போர் நிறுத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததற்கு புதினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE