லாலுவுக்கு 5 ஆண்டு சிறை... ரூ.60 லட்சம் அபராதம்!

By காமதேனு

தொரந்தா கருவூலத்திலிருந்து 139.5 கோடி ரூபாயை சட்டவிரோதமாக எடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிப்ரவரி 15-ல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பிப்ரவரி 21-ல் (இன்று) அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

லாலு மீதான கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் இது ஐந்தாவது வழக்கு ஆகும். அவர் பிஹார் மாநில முதல்வராக இருந்த காலகட்டத்தில் அந்த ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெற்று, தற்சமயம் பாட்னாவில் உள்ள லாலு உடநலம் சரியில்லாமல் இருக்கிறார். இதனால், காணொலி மூலம் நீதிமன்ற விசாரணையில் அவர் ஆஜரானார். அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள சிறை மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்திருக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு 60 லட்ச ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது.

லாலு மீதான இன்னொரு வழக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE