காலையில் திடீர் நிலநடுக்கம்!- தெறித்து ஓடிய ஜெய்ப்பூர் மக்கள்

By காமதேனு

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு ஓடினர். நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

வட மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அண்மையில் காஷ்மீர், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல நிலங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.01 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரில் இருந்து வடமேற்கே 92 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதங்கள், உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE