ஹிஜாப் சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு!

By காமதேனு

ஹிஜாப் சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடகாவில் இன்று 1 முதல் 10ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சை வெடித்தது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்தது. மாணவ -மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் வரும் 19ம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவுபடி இன்று 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமுடன் பள்ளிக்கு வந்தனர். இருப்பினும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. போராட்டங்கள், ஊர்வலம் நடத்தக் கூடாது, அனைத்து மாணவர்களும் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE