தொடங்கியது உத்தர பிரதேச முதல் கட்ட வாக்குப் பதிவு!

By காமதேனு

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டமாக நடக்கிறது. இன்று (பிப்.10) முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியிருக்கிறது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 6 மணி வரை நடக்கிறது. கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப் பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கரோனா பரவல் தடுப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

முதல் கட்டமாக, உத்தர பிரதேசத்தின், முஸாஃபர்நகர், மீரட், காஸியாபாத் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 623 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.27 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

ஜாட் சமூகத்தினர் அதிகமாக உள்ள மேற்கு உத்தர பிரதேசத்திலும், தோவாப் பகுதியிலும் உள்ள தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப் பதிவு நடப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE