அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள்!

By காமதேனு

அருணாசல பிரதேசத்தில், உயர்ந்த மலைப்பகுதியில் அமைந்திருக்கும் காமேங் பகுதியில் நேற்று (பிப்.6) ஏற்பட்ட பனிச்சரிவில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 அதிகாரிகள் சிக்கிக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து மீட்புப் பணியில் ஈடுபட சிறப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கின்றனர்.

பனிச்சரிவில் சிக்கியவர்கள், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பண்டே தலைமையிலான ரோந்துக் குழுவைச் சேர்ந்தவர்கள் என திஸ்பூரில் உள்ள பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக மிக மோசமான வானிலை நிலவுவதாகவும், அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அருணாசல பிரதேசத்தின் உயரமான மலைப் பகுதிகளில், இந்த மாதத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. குறிப்பாக தலைநகர் இட்டாநகர் அருகே உள்ள தரியா ஹில் பகுதியில், 34 ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், மேற்கு காமேங் மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் கடும் பனிப்பொழிவு இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE