“அக்காவுடன் நான்!” - குழந்தைப் பருவப் புகைப்படத்தை வெளியிட்ட ஆஷா போன்ஸ்லே

By காமதேனு

புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று மறைந்த நிலையில், அவரது தங்கையும் பாடகியுமான ஆஷா போன்ஸ்லே இன்ஸ்டாகிராமில் தங்கள் இளமைப் பருவப் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். தனது அக்கா லதா மறைந்த சில மணி நேரங்களில் அந்தப் படத்தை அவர் பகிர்ந்திருந்தார்.

“குழந்தைப் பருவ நாட்கள்தான் எத்தனை மகிழ்ச்சியானவையாக இருந்தன! அக்காவும் நானும்!” என அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது பதிவில், லதா மங்கேஷ்கரை நினைவுகூர்ந்து இசை ரசிகர்கள் உணர்வுபூர்வமாகப் பின்னூட்டம் இட்டுவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE