இந்தியாவில் குறையும் கரோனா பாதிப்பு; ஒரேநாளில் 1,192 பேர் உயிரிழப்பு

By காமதேனு

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,192 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்பான மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட விவரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 366 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 லட்சத்து 67 ஆயிரத்து 59ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 16 லட்சத்து 30 ஆயிரத்து 865 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 54 ஆயிரத்து 76 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 92 லட்சத்து 30 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 17 லட்சத்து 43 ஆயிரத்து 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,192 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் விகிதம் 94.91% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 3.90% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் 1,67,29,42,707 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 57,42,659 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE