தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை! - மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள் #Budget2022

By காமதேனு

2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* இதுவரை இல்லாத வகையில் ஜனவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,40,986 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

* கரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்சி மற்றும் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளால் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு.

* மொபைல் சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றின் உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரி சலுகை.

* தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு எந்த மாற்றமும் இன்றி ரூ.2.50 லட்சமாகவே தொடரும்.

* மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.

* பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சி வருமானங்களுக்கு 30% வரி விதிக்கப்படும்.

* டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும்.

* டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதற்கும் 1% வரி விதிக்கப்படும்.

* ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு.

* டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.

* 2023-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்கீழ் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்.

* திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம்.

* ஒருவர் செலுத்தும் வரி, நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்கிறது.

* மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் உதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* கூட்டுறவு சங்கங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 15 சதவீதமாக குறைப்பு.

* வரும் ஆண்டில் அரசின் செலவு ரூ.39.5 லட்சம் கோடி, வரவு ரூ.22.8 லட்சம் கோடியாக இருக்கும்.

* அரசின் நிதி பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 6.4 சதவீகிதமாக குறையும்.

* தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அளவு 10 சதவிகித்தில் இருந்து 14 சதவிகிதமாக உயர்த்தப்படும்.

* உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 68 சதவீத ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை.

* உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை வாங்க முன்னுரிமை.

* வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அவசர கால கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி.

* கூடுதல் நிதி ஒதுக்கீடு மூலம் சிறு குறு தொழில் துறையினருக்கான கடன் வழங்கும் நிதி 5 லட்சம் கோடியாகிறது.

* அரசின் மூலதன செலவினங்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கீடு. இது கடந்த ஆண்டைவிட ரூ.35.4 சதவிகிதம் அதிகம்

* ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் மூலதனச் செலவு ரூ.10.68 லட்சம் கோடியாக இருக்கும்.

* 5 உயர்கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்த ரூ.1,250 கோடி ஒதுக்கீடு.

* மின் வாகனங்களின் பேட்டரிகளை மாற்றிக் கொள்வதற்கு புதிய திட்டம்.

* நில சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக ஒரு நாடு ஒரு பதிவு என்ற நடைமுறை கொண்டு வரப்படும்.

* நில ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

* அனிமேஷன், கிராபிக்ஸ் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த, தேவைகளை பூர்த்தி செய்ய பேனல் அமைப்பு.

* பொதுப் போக்குவரத்தில் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு இல்லாத தூய்மையான போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* தொலைத் தொடர்பு துறையில் நடப்பாண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும்.

* சிறப்புப் பொருளாதார மண்டல திட்டங்களில் மாநில அரசுகளையும் சேர்க்கும் வகையில் திருத்தம்.

* கடந்த ஆண்டில் நாடு முழுவதும் ஒரு லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

* மாநிலங்களுக்கு இடையே கருத்தாெற்றுமை ஏற்பட்ட பின், நதிநீர் இணைப்பு திட்டங்கள் செயல்படுத்த நிதியுதவி.

* நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ.44,000 கோடி நிதி ஒதுக்கீடு

* பிரதமர் யோஜனா திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* நாடு முழுவதும் 3.8 கோடி குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் புதிய மையங்கள் திறக்கப்படும்.

* நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்

* நாடு முழுவதும் மேலும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்.

* அதிநவீன இ-பாஸ்போர்ட் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

* நாடு முழுவதும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

* முதற்கட்டமாக கங்கை நதிக்கரையில் விவசாயிகளுக்காக வசதிகள் மேம்படுத்தப்படும்.

* விவசாயிகளின் விளைபொருட்களை நகரங்களுக்கு கொண்டு செல்ல ரயில் போக்குவரத்து பயன்படுத்த முன்னுரிமை

* அடுத்த நிதி ஆண்டில் 22 ஆயிரம் கிமீ தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

* நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என கணிப்பு.

* தடுப்பூசி திட்டம் மிக விரைவாக செயல்படுத்தப்பட்டது பொருளாதார மீட்சிக்கு பெரிய அளவில் உதவியது

* நாடு முழுவதும் வரும் நிதி ஆண்டில் 22 ஆயிரம் கிமீ தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

* உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற நடைமுறை கொண்டு வரப்படும்.

* அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிப்பு

* ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

* ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

* சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

* எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு விரைவில் நடைபெறும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

* மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 புதிய திட்டங்கள் அறிமுகம்.

* சசி இயக்கம், வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.

* 2022-23-ம் ஆண்டில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு.

* ஒரு வகுப்பு ஒரு கல்வி சேனல் என்ற வகையில் 100 டிவி சேனல்கள் புதிதாக உருவாக்கப்படும்.

* 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் கற்பதில் ஏற்பட்ட பாதிப்பை சீர்செய்ய புதிய திட்டம் உதவும்.

* 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும்.

* விவசாய பணிகளில் டிரோன்களை பயன்படுத்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

* டிரோன்கள் மூலம் வேளாண் நிலங்களை அளவீடு செய்ய வேளாண் உற்பத்தியை மதிப்பிடவும் திட்டம்.

* இளைஞர்கள் தொழில் தொடங்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

* வந்தே பாரத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

* ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

* கோதாவரி - பெண்ணாறு - காவிரி உள்ளிட்ட 5 நதி இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.

* கோதாவரி - பெண்ணாறு - காவிரி இணைப்பு திட்டம் தமிழகத்துக்குப் பலனளிக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE