இந்தியாவில் கரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது!

By காமதேனு

இந்தியாவில் கரோனா 3-வது அலை பரவல் வேகமாக சரியத்தொடங்கினாலும், உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,67,059 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,192 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 076- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 43 ஆயிரத்து 059 ஆக உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 11.69 சதவிகிதமாக இருக்கிறது.

குணமடைந்தோர் விகிதம் 94.60% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.20% ஆக குறைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 11.69 சதவிகிதமாக உள்ளது. இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 166.68 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 61,45,767 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE