தடம்புரண்ட சரக்கு ரயில்; கேரளாவில் பல ரயில்கள் ரத்து

By காமதேனு

கேரளாவில் உள்ள ஆலுவா ரயில் நிலைய யார்டில் சரக்கு ரயில் தடம்புரண்டதால், 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் உள்ள ஆலுவா ரயில் நிலைய யார்டில் சரக்கு ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து, ஷோர்னூர்-எர்ணாகுளம் வழித்தடத்தில் இன்று அதிகாலையில் இருந்து ரயில் போக்குவரத்து தடைபட்டது. இரவு 10.30 மணியளவில் ஆலுவா நிலையத்தின் 3-வது நடைமேடையில் நுழையும்போது சரக்கு ரயிலின் 2, 3, 4, 5-வது வேகன்கள் தடம்புரண்டன.

இந்த விபத்தைத் தொடர்ந்து சில ரயில்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டதால், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. 11 ரயில்கள் ரத்து செய்யபட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தடம்புரண்ட சரக்கு ரயில் 42 வேகன்களுடன் ஆலுவா மற்றும் கொல்லம் ரயில் நிலையங்களில் இறக்குவதற்காக, தமிழகத்தில் இருந்து சிமென்ட் ஏற்றிச் சென்றதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE