ரயிலுக்குள் சத்தமாகப் பாட்டு கேட்டாலும், செல்போனில் பேசினாலும் அபராதம்!

By காமதேனு

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாகப் பேசினாலோ, சத்தமாகப் பாட்டு கேட்டாலோ அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை உட்பட பல மாநிலங்களில் ரயில்களில் பயணிக்கும் பயணிகள், தங்கள் செல்போனில் சத்தமாகப் பாட்டு கேட்பது, சத்தமாகப் பேசுவது மற்ற பயணிகளை முகம்சுழிக்க வைக்கிறது. இதுகுறித்த புகார்கள் வந்தநிலையில், ரயில்வே நிர்வாகம் ‘ரயில் பயணிகளுக்குத் தொல்லைதரும் செயல்களுக்கு தடையும் அபராதமும் விதிக்கப்படும்’ என்ற புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

எந்த ஒரு பயணியும் தமக்கு தொந்தரவு ஏற்படுவதாகப் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க ரயில்வே காவல் துறையினர் மற்றும் டிக்கெட் பரிசோதகர், ரயில்வே ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்களில் இரவு 10 மணிக்குமேல் விளக்குகளை எரிய விடக்கூடாது என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE