இந்தியாவில் நேற்று 2.58 லட்சம் பேர்; இன்று 2.38 லட்சம் பேர்!

By காமதேனு

இந்தியாவில் நேற்று கரோனா பாதிப்பு 2.58 லட்சமாக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

இந்தியாவில் கரோனா 3வது அலை பரவியுள்ளால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 லட்சத்து 58 ஆயிரத்து 89 மற்றும் நேற்று முன்தின பாதிப்பான 2 லட்சத்து 71 ஆயிரத்து 202-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 75 லட்சத்து 18 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 57 ஆயிரத்து 421 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 53 லட்சத்து 94 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 17 லட்சத்து 36 ஆயிரத்து 628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 761 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 158 கோடியே 4 லட்சத்து 41 ஆயிரத்து 700 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE