குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் திடீர் நிராகரிப்பு; காரணம் என்ன?

By காமதேனு

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்திகள் திடீரென நிராகரித்துள்ளது மத்திய அரசு. நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளது.

டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குயடிரசுத் தின விழாவில் ஒவ்வொரு மாநிலங்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் தங்கள் அலங்கார ஊர்திகள் வலம் வரும். இந்தாண்டு நடைபெறும் குடியரசுத் தின விழாவில் தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர கேரளா, ஆந்திரா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் அலங்கார ஊதிர்களை மத்திய அரசு நிராகரித்திருந்தது. மேலும் மேற்கு வங்க அரசின் அலங்கார ஊதிர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், உலக தலைவர்களுக்கு வ.உ.சி, வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் ஆகிய தலைவர்களை தெரியாது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டும் தான் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE