கன்னியாஸ்திரி பாலியல் வழக்கிலிருந்து பிஷப் ஃபிரான்கோ விடுவிப்பு!

By காமதேனு

கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் இருந்து பிஷப் ஃபிரான்கோ முல்லக்கல்லை விடுவித்துள்ளது கோட்டயம் நீதிமன்றம்.

ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மாவட்டத்தின் பேராயராக இருந்த ஃபிரான்கோ முல்லக்கல் மீது கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் காவல்துறையில் பாலியல் புகார் அளித்தார். அதில், "கடந்த 2014ல் இருந்து 2016 வரையில் ஃபிரான்கோ பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்" என்று கூறியிருந்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பிஷப் ஃபிரான்கோ முல்லக்கல்லை கைது செய்தனர். இந்த வழக்கு கோட்டயம் நீதிமன்றம் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த கோட்டம் நீதிமன்றம், பிஷப் ஃபிரான்கோ முல்லக்கல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE