‘பெண்ணிடம் எந்தப் பொருளைக் கேட்டாலும் வரதட்சணைதான்’

By காமதேனு

“பெண் வீட்டாரிடம் இருந்து சொத்தாகவோ அல்லது எந்த வடிவத்திலான, மதிப்புமிக்க எதை வாங்கினாலும் அதை வரதட்சணையாகவே கருத வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது.

வரதட்சணை தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, “வரதட்சணை என்ற வார்த்தைக்கு, சட்டத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். பெண் வீட்டாரிடம் இருந்து சொத்தாகவோ அல்லது எந்த வடிவத்திலான, மதிப்புமிக்க எதை வாங்கினாலும் அதை வரதட்சணையாகவே கருத வேண்டும். பெண் வீட்டாரிடம் சொந்த வீடு கட்ட பணம் கேட்பதையும் வரதட்சணைக்கு உள்ளாக கொண்டு வர வேண்டும்.

திருமணம்

வரதட்சணை போன்ற சமூகக் கேடுகளை வேரோடு பிடுங்கும் அளவுக்கு ஐபிசி 304 பி பிரிவில், அதற்கான விரிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். வரதட்சணையை ஊக்குவிக்கும் சட்ட விளக்கங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். பெண்களிடம் பெண்களே வரதட்சணை கேட்பது, மிகவும் மோசமான குற்றச் செயல். வரதட்சணை வழக்குகளை நீதிமன்றங்கள் விசாலமான முறையிலும் விரிவான முறையிலும் அணுகும்படி அதில் சட்ட செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE