2 நாட்களுக்கு 144 தடை: ஒமைக்ரான் பரவலைத் தடுக்க மும்பையில் ஏற்பாடு!

By காமதேனு

ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் நோக்கில் மும்பையில் இன்று(டிச.11) தொடங்கி, 2 தினங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அவைகளின் மத்தியில் புதிய ரகரமான ஒமைக்ரானும் அடையாளம் காணப்பட்டு வருகிறது. எனவே, விடுமுறை தினத்தை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் கூடவும், பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்த பேரணி உள்ளிட்டவற்றை தடுக்கவும், மும்பை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று(டிச.10) 695 புதிய கோவிட் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டனர். சிகிச்சையிலிருந்த 12 பேர் ஒரேநாளில் இறந்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அடையாளம் காணப்படும் ஒமைக்ரான் பரவலின் மத்தியில், நேற்று ஒருநாளில் மட்டும் புதிதாக 7 பேர் உறுதி செய்யப்பட்டனர். இதன் மூலம் மாநிலத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒமைக்ரானின் பிரச்சினையே அது பரவும் வேகம் என்பதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என மும்பை உள்ளாட்சி நிர்வாகத்தின் கவலை கொண்டுள்ளனர். எனவே, விடுமுறை தினங்களில் மும்பை மாநகரில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் நோக்கில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலின் 2-ம் அலை தந்த கசப்பான பாடங்கள், இந்த தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மும்பையை தள்ளியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE