எதிர்க்கட்சி மாநிலங்களில் வரிந்துகட்டும் பாஜக!

By காமதேனு

அண்மையில், கலால் வரி குறைப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைத்து மத்திய அரசு அறிவித்தது. வாட் வரி குறைப்பின் வாயிலாக பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்குமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இந்தக் கோரிக்கைக்கு பாஜக ஆட்சிபுரியும் மாநிலங்கள் மட்டுமே செவிசாய்த்தன. பாஜக அல்லாத மாநிலங்கள் இன்னமும் உடன்படவில்லை.

அந்த வகையில், 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மட்டுமே வாட் வரி குறைப்பு மூலம் எரிபொருள் விலை குறைப்புக்கு இசைந்துள்ளன. தமிழகம், கேரளம், மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம் உட்பட 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இன்னமும் இசையவில்லை.

இதையடுத்து இந்த மாநிலங்களில் எரிபொருள் மீதான வாட் வரி குறைப்பை அமல்படுத்துமாறு, பாஜக வலியுறுத்தி வருகிறது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பாஜக போராட்டமும் அறிவித்துள்ளது.

இதன் மூலம் கடந்த வாரம்வரை எரிந்துகொண்டிருந்த, எரிபொருள் விலை குறைப்பு கோரும் போராட்டத் தீ தற்போது திசை மாறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE