முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவு

By காமதேனு டீம்

கர்நாடக மாநிலம் மங்களுருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் (80) காலமானார்.

ஜூலை மாதம் யோகாசனம் பயிற்சி செய்தபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் இன்று (செப்.13) மதியம் அவர் மரணமடைந்தார்.

உடுப்பியைச் சொந்த ஊராகக் கொண்ட பெர்னாண்டஸ் 1980-களின் பிற்பகுதியில் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் பிறகு அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் இணைச் செயலாளராகவும் பதவி வகித்தார். 1983 முதல் 1997 வரையில் ஐந்து முறை உடுப்பியிலிருந்து மக்களவைக்குத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 ஏப்ரலில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய தலைவராகத் திகழ்ந்தார்.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் போக்குவரத்து, சாலை – நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தார். தொழிலாளர் நலம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகள் கூடுதல் பொறுப்பாகத் தரப்பட்டிருந்தன.

அவரது மறைவுக்கு ராகுல் காந்தி, சித்தராமய்யா, வீரப்ப மொய்லி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE