வேலை போய்விட்டால் ஞாயிறென்ன, திங்கள் என்ன? ட்விட்டரில் பாஜக அரசை விளாசிய ராகுல் காந்தி

By காமதேனு டீம்

இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருக்கும் நிலையில், அது தொடர்பாக இந்தி நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் ராகுல் காந்தி, “பாஜக அரசின் 'வளர்ச்சி' ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கள் கிழமைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது” என்று விமர்சித்திருக்கிறார்.

சென்னையிலும் அகமதாபாதின் சனந்த் பகுதியிலும் கார்களை உற்பத்தி செய்யும் பிரிவுகளை மூடிவிட முடிவு செய்திருப்பதாக அமெரிக்காவின் ஃபோர்டு கார் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி நடந்தால் சென்னையைச் சுற்றியுள்ள 4,000 குறு, சிறு, நடுத்தரத் தொழில்பிரிவுகளை மூடிவிட நேரும் இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலையை இழப்பார்கள் என்று மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த ஒருவர் இந்தி நாளிதழ் ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார். அந்தச் செய்தியையும் இணைத்து ட்விட்டரில் விமர்சித்திருக்கும் ராகுல் காந்தி, “வேலை போய்விட்டால் ஞாயிற்றுக்கிழமை என்ன – திங்கள் கிழமை என்ன எல்லாம் ஒன்றுதான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE