புதுதில்லி:
தமிழகத்தின் 2 இடங்கள் உட்பட 5 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு, அக்டோபர் 4-ல் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ராஜ்ய சபா எம்பி-க்களான கே.பி.முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்பி பதவியை ராஜினாமா செய்ததால், 2 ராஜ்ய சபா இடங்கள் காலியாகின. இதேபோல் மேற்கு வங்கம், அசாம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் காலியாக உள்ளது. இந்த இடங்களுக்கான தேர்தல், அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இத்துடன், பிஹார் சட்ட மேலவையில் தன்வீர் அக்தர் என்பவரின் மறைவால் காலியான இடத்துக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளில், கரோனா பெருந்தொற்றுக்கால தேர்தல் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு தொடர்புள்ள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.