கோதுமை, கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு

By காமதேனு டீம்

கோதுமை, கடுகு உள்ளிட்டவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அமைச்சரவை உயர்த்தி அறிவித்திருக்கிறது. இந்த விலை உயர்வு 2022-23 ரபி சந்தைப் பருவத்துக்கானது.

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ரூ.1,975-லிருந்து ரூ.2,015ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடுகு விதைக்கான விலை நடப்பு சாகுபடி பருவத்துக்கே குவிண்டாலுக்கு ரூ.400 உயர்த்தப்பட்டு ரூ.5,050ஆக வழங்கப்படவுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

காரிப் மற்றும் ரபி பருவங்களில் சாகுபடியாகும் 23 பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அரசுதான் நிர்ணயிக்கிறது. இது சாகுபடிச் செலவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

கோதுமையின் சாகுபடிச் செலவு ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,008 என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2021-22 ரபி பருவத்தில் 430 லட்சம் டன் கோதுமையை அரசு கொள்முதல் செய்திருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE