புதுடெல்லி: வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றாலும் அவரது வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாராணசியில் பிரதமர் மோடி 5,81,022 (56.37%) வாக்குகள் பெற்றார். இதைவிட கூட கூடுதலாக, 6,74,644 (63.62%) வாக்குகளை 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி பெற்றிருந்தார்.
இந்நிலையில் தற்போதைய தேர்தலில் பிரதமர் மோடி 6,12,970 (54.24%) வாக்குகளை பெற்றுள்ளார். இது கடந்த தேர்தலை விட 9 சதவீதம் குறைவாகும்.
» மக்களவை தேர்தல் முடிவுகள்: 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள படிப்பினை - பழனிசாமி கருத்து
» பாலியல் புகாரில் கைதான கோயில் பூசாரி ஜாமீன் மனு: போலீஸ் பதில் தர உத்தரவு
அதேவேளையில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராஜின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் வெறும் 14 சதவீத வாக்குகள் பெற்ற அஜய் ராய் இம்முறை 40.74% (4,60,457) வாக்குகளை பெற்றுள்ளார்.
அஜய் ராஜியின் வாக்கு சதவீத உயர்வுக்கு சமாஜ்வாதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது காரணமாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் சமாஜ்வாதி தனது வேட்பாளரை நிறுத்தியது. இம்முறை அக்கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை.