இந்தியாவுக்குள் மாற்று வழியில் வரும் ‘வால்மார்ட்'!

By காமதேனு

அமெரிக்க நிறுவனமான வால்மார்ட், ஃப்ளிப்கார்ட்டின் வழியே இந்திய இணையவழி வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றக்கூடும்.

இந்தியாவின் மிகப் பெரிய இணையவழி வர்த்தக (இ-காமர்ஸ்) நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டை அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் கையகப்படுத்தியுள்ளது. ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது வால்மார்ட்!

சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகியோரால், ‘ஃப்ளிப்கார்ட்’ தொடங்கப்பட்டு 11 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது இதன் மொத்த மதிப்பு 20.8 பில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், வால்மார்ட் வெறும் 16 பில்லியன் டாலருக்கு இந்நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை தன்வசப்படுத்தியிருக்கிறது. மதிப்பளவில் இதுவரை நடந்துள்ள நிறுவனக் கையகப்படுத்துதலில் இதுதான் முதலிடத்தில் உள்ளது. ஆனால், இந்த விலை மிகவும் குறைவு என்கிறார்கள் தொழில்துறையினர்.

ப்ளிப்கார்ட்டை வாங்க ‘வால்மார்ட்’டும் ‘அமேசானும்’ நீண்டகாலமாகவே போட்டி போட்டுக்கொண்டிருந்தன. தற்போது வால்மார்ட் ஜெயித்துவிட்டது. பெரும்பான்மை பங்குகளை வால்மார்ட் கைப்பற்றியிருப்பதால், இனி நிறுவனத்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE