எச்சரிக்கை போதுமா?

By காமதேனு

எச்சரிக்கை போதுமா?

இந்தியத் திரைப் படங்களில் புகைபிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் வரும்போது அபாய எச்சரிக்கை ஸ்லைடு போடப்படும். அது போல, இனிமேல் மலையாளப் படங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைக் காட்சிகள் வரும்போதும், ‘பெண்கள் மீது வன்முறையை செலுத்துவது தண்டனைக்குரிய குற்றம்’ என்ற எச்சரிக்கை அறிவிப்பை திரையில் காண்பிக்க வேண்டும் என்று, கேரள மாநில மனித உரிமை ஆணையம் அம்மாநில தணிக்கை வாரியத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ஆனால், “எவையெல்லாம் பெண்களுக்கெதிரானவன் முறை என்று வரையறுப்பது கடினம் என்பதால், இந்த உத்தரவை நடை முறைப்படுத்தப்படுவதில் சிக்கல்கள் உள்ளன. அவற்றைப் பேசித்தான் தீர்க்க வேண்டும்” என்கிறது மனித உரிமை ஆணையம். ஆண்களின் மனதில் மாற்றம் நிகழாதவரையில், இதுபோன்ற எச்சரிக் கைகளால் எந்தப் பயனும் இல்லை என்று விமர்சிக்கின்றனர் கேரள பெண்ணியவாதிகள். நியாயம்தானே?

காதலர் தினத்தில் பெற்றோருக்கு பூஜை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE