கயவர்களுக்கு ‘ஞானம்’ புகட்டும் தீர்ப்பு

By காமதேனு

பாலியல் பலாத்கார வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

16 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சாமியார் ஆசாராம் பாபுவைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நீதிமன்றம். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 77 வயதாகும் ஆசாராம் மரணம் வரை சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

1970-களில், சபர்மதி நதிக்கரையில் தனது முதல் ஆசிரமத்தைத் தொடங்கிய ஆசாராம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க சீக்கிரமே பிரபலமானார். இந்தியாவிலும் உலகின் பிற நாடுகளிலும் மொத்தமாக இவரது பெயரில் 400 ஆசிரமங்கள் இயங்குகின்றன. இவரது சொத்து மதிப்பு ரூ.10,000 கோடி!

2013-ல், ஜோத்பூரில் உள்ள ஆசிரிமத்தில், ஆசாராம் தங்களது மகளை பலாத்காரம் செய்துவிட்டார் என்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகாரளித்தனர். அந்த வழக்கில் பல்வேறு தடைகளைக் கடந்து ஆசாராம் கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE